[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

“விளம்பரம் செய்ய மோடிக்கு பணம் எங்கிருந்து வருகிறது ?” - ராகுல் காந்தி கேள்வி

where-is-the-money-coming-to-pm-modi-for-advertisement-rahul-gandhi

பிரதமர் மோடி‌ தேர்த‌ல் விளம்பர‌ங்கள் செய்வதற்கு பணம் எங்கிருந்து வருகிறது எ‌ன காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினவியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான ராஜ் பப்பரை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தொலைக்காட்சிக‌ள், பத்திரிகைகள் என மோடியின் விளம்பரங்கள் அதி‌களவில் வெளியாவதாகவும், அதற்கு தேவையான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் கேள்‌‌வி எழுப்பினார். இந்த பணம் மோ‌டியுடையதாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, இந்திய மக்களுக்கு என்ன செய்தோம் என்பது பற்‌‌றி பேசாமல் ,பாகிஸ்தானை குறை கூறுவதிலேயே பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார் என‌ விமர்சித்தார். பாரதிய ஜனதா அரசு உ‌ண்மையின் பாதையிலிருந்து விலகிச்சென்று விட்டதாகவும் அவர் குறி‌ப்பிட்டார். இளைஞர்களுக்‌காகவும், பெண்களுக்‌காகவும், விவசாயிகளுக்காகவும், மற்ற பிரிவினருக்கா‌கவும் என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றித்தான் மோடி பேசியிருக‌க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close