[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

காகிதப் பைக்காக 3 ரூபாய் வாங்கிய பாட்டா கடைக்கு 9 ஆயிரம் அபராதம்

shoemaker-bata-fined-rs-9-000-for-making-customer-pay-rs-3-for-carry-bag

வாடிக்கையாளர்களிடம் காகிதப் பைக்காக 3 ரூபாய் வசூலித்த பாட்டா நிறுவனத்திற்கு ரூபாய் 9,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் பிரசாத் ரத்தோரி. இவர் நுகர்வோர் மன்றத்திடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் தான் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி, செக்டார் 22D பகுதியில் அமைந்துள்ள பாட்டா ஷோரூமில் 1 ஜோடி பாட்டா செருப்பு வாங்கியதாக தெரிவித்துள்ளார். ஜோடி செருப்பின் விலை ரூ.399 எனவும், ஆனால் தன்னிடம் இருந்து ரூ.402 பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கூறினார். காகிதப் பைக்காக கூடுதலா 3 ரூபாய் வாங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியிருந்தார்.

தினேஷின் புகார் மீது தீர்ப்பளித்த நுகர்வோர் மன்றம், பாட்டா நிறுவனம் 9000 ரூபாய் அபராதமாக செலுத்த உத்தரவிட்டது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக காகிதப்பை வழங்கவும் பாட்டா நிறுவனத்திற்கு நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி காகிதப் பைக்காக பணம் வாங்குவது, சேவை குறைபாட்டை காட்டுவதாக தெரிவித்த நுகர்வோர் மன்றம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இலவச காகிதப் பை வழங்குவது நிறுவனத்தின் கடமை என்றும் தெரிவித்தது. அத்துடன் காகிதப் பைக்காக வாங்கிய 3 ரூபாயை அந்த வாடிக்கையாளரிடம் திரும்ப செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close