[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

பிரதமரை திருடன் என்ற விவகாரம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

supreme-court-issues-notice-to-rahul-gandhi

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ரபேல் போர் விமான ‌ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்கள் மீது, புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவி‌த்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் ‌தலைவர் ராகுல் காந்தி, புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த சம்மதித்தன் மூலம், பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கருதுகிறது எனும் பொருள்படும் வகையில் பேசினார்.

இந்நிலையில் ரபேல் குறித்த உத்தரவில் மோடியை‌ பற்றி நீதிபதி எதுவுமே கூறாத ‌நிலையில், அவர் பேச்சை ராகுல் திரித்துக் கூறியுள்ளார் என்று பாதுகாப்புத்துறை ‌அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். மேலும், இது நீதிமன்ற அவமதிப்பு எனவும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். 

அதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா எம்பி மீனாட்சி லேகி, ராகுல் காந்தி மீது, ‌நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் 22 ஆம் தேதிக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close