[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் - ஆரம்பகட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணம் தெரிந்ததாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல்

''ரிஸ்க் எடுக்காதீர்கள்; மரத்திலிருந்து கீழே இறங்குங்கள்'' - தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர்

pm-modi-urges-bjp-supporters-dangling-from-trees-to-be-safe-crowd-cheers

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் இந்தியா முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். 

இந்நிலையில் கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த கூட்டம் மட்டுமல்லாமல் ஏராளமான தொண்டர்கள் மரங்களில் ஏறிக்கொண்டு பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். மரத்தில் அமர்ந்திருந்த தொண்டர்களை கவனித்த மோடி அவர்களை பத்திரமாக இருக்குமாறு குறிப்பிட்டு பேசினார்.  

மேலும் பேசிய அவர் ''நீங்கள் எல்லாரும் பத்திரமாக இருக்கிறீர்களா? உங்களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் மிகுந்த துயரத்துக்கு ஆளாவேன். உங்களுக்கு பிரச்னை ஒன்றுமில்லை என்றால் மரங்களில் இருந்து கீழே இறங்குங்கள். நீங்கள் ரிஸ்க் எதும் எடுக்காதீர்கள்.

நான் உங்களுக்கானவன். நான் மீண்டும் உங்களிடத்துக்கு வந்து உங்களை சந்திப்பேன்" என்று தெரிவித்தார். மோடியின் பேச்சைக் கேட்ட அங்கு கூடி இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close