[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

ஒரு வாரம் குளிக்காமல் இருந்த கணவன் ! விவாகரத்து கேட்ட மனைவி

husband-does-not-shave-bathe-mp-woman-files-for-divorce

கணவர் கிட்டத்தட்ட 1 வார காலமாக குளிக்காமல் இருந்ததால் மனைவி விவகாரத்து கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது வரை குழந்தைகள் இல்லை. இதனிடையே கணவர் அடிக்கடி 1 வார காலத்திற்கும் மேலாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இழுத்தடிப்பதாகவும், ஒரு வாரத்திற்கும் மேலாக அடிக்கடி குளிக்காமல் இருப்பதால் விவாகரத்து கோரி மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு 6 மாத காலத்திற்கு கணவன்- மனைவியை பிரிந்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், அதன்பின் விவாகரத்து வழங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது. இதனிடையே அண்மையில் சின்னச் சின்ன காரணங்களுக்காக கூட தம்பதியினர் புரிதல் இல்லாமல் விவாகரத்து கேட்பதாக நீதிமன்ற ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

தம்பதியினருக்கு இரண்டு வீட்டார் சம்மதத்துடனேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது. தற்போது அப்பெண்ணின் வீட்டார், கணவரை விட்டு பிரியாதே என எவ்வளவோ எடுத்துக்கூறியும் அப்பெண் அதனை கேட்காமல் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறியது தெரியவந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவி தன்னை ஷேவ் செய்ய வேண்டும் என நிர்பந்திப்பதாவும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவதாகவும் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close