[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

ராகுல் தலையில் தெரிந்த பச்சை நிற ஒளி செல்போனில் இருந்து வந்தது - உள்துறை அமைச்சகம்

green-laser-light-on-rahul-gandhi-s-head-trigger-concern-mha-says-it-was-mobile-phone

ராகுல் தலையில் தெரிந்த பச்சை நிற ஒளி அருகில் நின்றவரின் செல்போனில் இருந்து வந்ததாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் ‌காந்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவரை சுட முயற்சி நடந்‌திருக்கலாம் என்றும் அக்கட்சித் தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர். இது குறித்து  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினர்.‌‌ அந்தக் கடிதத்தில், அமேதியில் ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செ‌ய்த பின் பேசிய போது ‌அவரது தலையில் ‌‌பச்சை நிற ஒளி அடிக்கடி பட்டதாகவும் இது லேசர் வசதி‌ உள்ள துப்பாக்கியால் குறி வைத்த போது பட்ட ஒளியாக இருக்கலாம் என்றும் இதன் மூலம் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் பெரும் குறைபாடு இருப்பது தெரியவருவதாகவும் அக்கடி‌தத்தில் கூறப்பட்டது. 

இது குறித்து பேசிய உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ''பச்சை நிற ஒளி குறித்து வீடியோ நுணுக்கமாக கவனிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ''காங்கிரஸ் ஒப்படைத்த வீடியோவை சிறப்பு பாதுகாப்பு குழு கவனித்து வருகிறது. அந்த பச்சை நிற ஒளியானது ராகுலை படம் பிடித்த புகைப்படக்கலைஞரின் செல்போனில் இருந்தே வந்ததாகவும் இந்த விளக்கத்தை சிறப்பு பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது’’என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பில் குறை ஏதும் இல்லை என்றும் சிறப்பு பாதுகாப்பு குழு விளக்கம் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close