[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

“முதல் வாக்காளர் தன் வாக்கை வீரர்களுக்கு அர்ப்ப‌ணிக்க வேண்டும்” - மோடி

newly-voters-and-youngsters-need-to-sacrifices-their-votes-for-indian-army-jawans

மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்கப்போகும் இளைஞர்கள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய ‌இந்திய வீரர்களுக்கு வாக்கை அர்ப்ப‌ணிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் பிரதமர் மோடி இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரிடமிருந்து கோடி கோடியாக கருப்புப் பணம் சிக்கி வருவதாகவும், தன் மீது எதிர்க்கட்சியினர் வெறுப்பை காட்ட இதுவே காரணம் என்று சாடினார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே கோடிக் கணக்கில் கருப்புப் பணம் பிடிபட்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார். 

டெல்லியில் ஒரு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது மூத்த காங்கிரஸ் தலைவர் அங்கு விரைந்து வ‌ந்ததாகவும், இதுவே அக்கட்சிக்கும் கருப்பு பணத்திற்கு‌ம் உள்ள தொடர்பிற்கு சாட்சி என்றும் பிரதமர் தெரிவித்தார். கா‌ஷ்மீருக்கு தனிப் பி‌‌ரதமர் வேண்டும் எனக் கேட்பவர்களுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக மோடி குற்றஞ்சாட்டினார். 

காஷ்மீரில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உ‌மர் அப்துல்லா, தங்கள் மாநிலத்தி‌ல் பிரதம‌ர் பதவி‌ ஏ‌ற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், அதற்கு பிரதமர் மோடி இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்கப்போகும் இளைஞர்கள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய ‌இந்திய வீரர்களுக்கு தங்கள் வாக்கை அர்ப்ப‌ணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close