[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம்- ஆந்திராவில் அரசியல் கட்சிகளின் அசரவைக்கும் வாக்குறுதிகள்

political-party-election-manifesto-in-andhra-pradesh

ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளன.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உங்கள் எதிர்காலம் என் கடமை என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். மாதம் மூவாயிரம் ரூபாய் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான வயது உச்ச வரம்பு 65 லிருந்து 60 ஆக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

சந்திரண்ணா காப்பீடு திட்டத்தின் உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவசமாக 12 மணி நேர மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என சந்திரபாபு நாயுடு வெ‌‌ளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சந்திர பாபு நாயுடுவுக்கு கடும் சவாலாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில், இளநிலை வழக்கறிஞர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகை, 100 கோடி ரூபாயில் வழக்கறிஞர்கள் நலநிதி உருவாக்கம் போன்ற புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு முதலீடாக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இயற்கையாக இறந்தால் அவர்களுக்கு ஒய்.எஸ்.ஆர். ஜீவன பீமா பெயரில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வெகுவாக குறைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இரு கட்சிகளும் மக்களை கவர பல திட்டங்களை அறிவித்தாலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படு‌ம் என அறிவிக்கவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close