[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

“மக்கள் விருப்பத்திற்காகவே யானை சிலைகள் நிறுவப்பட்டன” - மாயாவதி வாதம்

mayawati-justifies-installation-of-her-statues-in-up-says-it-was-people-s-will

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தனது சிலை மற்றும் கட்சியின் சின்னம் ஆகியவை மக்களின் விரும்பியதால் தான் நிறுவப்பட்டது என்று அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மாயாவதி சிலை மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகள் நிறுவியது தொடர்பாக வழக்கறிஞர் ரவி காந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் சிலைக்காக செலவு செய்த அனைத்து அரசு தொகையையும் ஏன் மாயாவதி தனது கையிலிருந்து திருப்பி தரக்கூடாது என்று கேள்வி எழுப்பி இருந்தது. 

அத்துடன் வழக்கு விசாரணையை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தப் போது மாயாவதி சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் “மாயாவதி சிலை மற்றும் யானை சிலைகள் மக்களின் விருப்பத்திற்காக நிறுவப்பட்டது. அத்துடன் சிலைகள் அனைத்தும் சமூக மதிப்புகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் ஆகியோரை பறைசாற்றும் வகையில் நிறுவப்படுகின்றன. இவை எதுவும் பகுஜன் சமாஜ் கட்சியை விளம்பரப்படுத்த அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக மாயாவதி முதல்வராக உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தப் போது லக்னோ மற்றும் நொய்டா பகுதிகளில் நூற்று கணக்கான சிலைகள் நிறுவப்பட்டன. குறிப்பாக பட்டியலின தலைவர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராம் மற்றும் அக்கட்சியின் சின்னமான யானை ஆகிய சிலைகள் நிறுவப்பட்டன. இவை அனைத்தும் ரூ2,600 கோடி செலவில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close