[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

ஸ்ரீநகரில் கார் குண்டு வெடிப்பு!

j-k-explosion-occurred-in-a-car

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் கடந்த நிலையில், கார் குண்டு பயங்கரமாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப் பட்டனர். இதையடுத்து அங்கு பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பனிஹால் பகுதியில், ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காரில் பயங்கர குண்டு வெடித்தது. பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் கடந்து சென்றதும் இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பானது.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றனர். பின்னர் தீ அணைக்கப்பட்டது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

பின்னர் கிடைத்த தகவலின் படி, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் ஒன்றின் பின் பகுதியில் லேசான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close