[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும் - ராகுல்காந்தி

niti-aayog-fudged-data-will-scrap-it-if-voted-to-power-says-rahul-gandhi

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

தேர்தல் நேரங்களில் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை, புதிய திட்டங்களை கொடுத்து வருகின்றன. அதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நாட்டிலுள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தப் போவதாக கூறியது.  

ஏழை குடும்பங்கள் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வருவாயை ஈட்டுவதை உறுதிப்படுத்தும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். அத்துடன் அவர், ஏழை மக்களின் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும், இது போன்ற திட்டம் உலகில் எங்குமே செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். இது பொருளாதார அடிப்படையில் சாத்தியாமா இல்லையா என விவாதங்கள் எழுந்தன. 

இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் கலைக்கப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும். பிரதமர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவும், புள்ளிவிவர தரவுகளை மாற்றிச் சொல்லவுமே நிதி ஆயோக்கை பயன்படுத்துகிறார். எந்த பயனும் இல்லாத அந்த அமைப்பு கலைக்கப்பட்டு புதிய திட்டக்குழு உருவாக்கப்படும். இக்குழுவில் பொருளாதார வல்லுநர்களும், 100க்கும் குறைவான பணியாளர்களும் இருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் அமைப்பு என்பது பொருளாதாரம், எதிர்கால திட்டம் என பல்வேறு விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close