[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

திரிணாமுல் காங்கிரஸில் இணைகிறார் திரிபுரா முன்னாள் முதலமைச்சர்

tripura-ex-cm-6-cong-mlas-to-join-tmc-in-july

திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்‌ 7 பேர் திரிணாமூல் காங்கிரஸில் இணைவதாக அறிவித்துள்ளனர்.

ரமலான் முடிந்ததும், 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும், முன்னாள் திரிபுரா முதலமைச்சர் சமிர் ரஞ்சன் பர்மன் திரிணாமூல் காங்கிரஸில் இணைய உள்ளதாக பர்மனின்‌ மகன் சுதிப் ராய் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ, பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிட‌ம் கடிதம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சி நடைபெறும் நிலையில், மம்தா பானர்ஜி த‌லைமையின் கீழ் திரிபுரா சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் ராயுடனான சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close