[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

பசுக்களைக் காக்க கருப்புப் பணம்: ராஜஸ்தானின் சர்ச்சை எம்எல்ஏ

rajasthan-bjp-mla-gyandev-ahuja-says-he-accpets-black-money-and-uses-it-to-save-cows

பசுக்களைக் காக்கும் நல்ல நோக்கத்துக்காக கருப்புப் பணத்தை நான் ஏற்றுக் கொள்வேன் என்று பேசி ராஜஸ்தான் எம்எல்ஏ ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தின் ராம்கார்க் தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் கயந்தேவ் அகுஜா. சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அவ்வப்போது சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கம்.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மாணவர் போரட்டம் நடந்துகொண்டிருந்த போது பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அகுஜா, அந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆணுறைகளும், கருக்கலைப்பு ஊசிகளும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி சர்ச்சைக்குள்ளானார். இந்த விவகாரம் பெரிதானதால், பாஜக தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்தநிலையில், கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதை என்னிடம் கொடுத்தால் பசுக்களைக் காப்பாற்றும் நல்லெண்ணத்துக்காக அதை நான் பயன்படுத்துவேன் என்று பேசி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும், ஏழைப் பெண்களின் திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல, தன்னிடம் கருப்புப் பணத்தை ஒப்படைத்தவர்களுக்கு பணம் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டையும் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close