[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

பொருளாதார வளர்ச்சியில் முந்திச் செல்லும் தென் மாநிலங்கள் !

karnataka-economy-grew-132-since-2011-says-rbi-data

கர்நாடகா மாநிலத்தின் பொருளாதாரம்  2011 ஆண்டிலிருந்து தற்போது வரை 132% வளர்ச்சி அடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி மற்றும் மாநில பட்ஜெட் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பொதுவாக பொருளாதார வளர்ச்சியில் வட மாநிலங்களைவிட தென் மாநிலங்களே அதிகம் ஓங்கியுள்ளதாக தரவுகள் தெரிவித்து வருகின்றன. அதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தற்போது மற்றொரு தரவு வெளியாகியுள்ளது. அதில் தென் இந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடகா மாநிலத்தின் பொருளாதாரம் கடந்த 9 ஆண்டுகளில் 132% வளர்ச்சி கண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் தென் இந்திய அளவில்  பொருளாதாரத்தில் கடந்த 9 ஆண்டில் அதிக வளர்ச்சி அடைந்துள்ள மாநிலமாக கர்நாடகா உயர்ந்துள்ளது. கர்நாடகத்தை விட பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள தமிழ்நாடு கடந்த 9 ஆண்டுகளில் 101%தான் வளர்ந்துள்ளது. அதேபோல மற்றொரு தென் இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம் இந்த காலளவில் 129% பொருளாதார வளர்ச்சிதான் அடைந்துள்ளது.

மேலும் கர்நாடகாவின் இந்த அசூர வளர்ச்சிக்கான காரணமும் இந்தத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகா மாநிலம் சுய கடன், தொழிற்கடன் மற்றும் சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு அளித்த முன்னுறிமையே காரணம் எனத் தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் 2011-2019ஆம் ஆண்டு காலளவில் சுய கடன் அளிப்பது 218% உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சுய கடன் அளிப்பது 143% தான் உயர்ந்துள்ளது. இந்திய அளவில் குஜராத் மாநிலத்தில் தான் அதிகமாக  சுய கடன் அளிப்பது (306%) உயர்ந்துள்ளது.

அத்துடன் 2011-2019ஆம் ஆண்டு வரையுள்ள காலளவில் சமூக வளர்ச்சி திட்டங்களுக்காக கர்நாடகாவின் நிதி ஒதுக்கீடு 186% உயர்ந்துள்ளது. அதாவது கர்நாடகா மாநிலம் சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு 2011ஆம் ஆண்டு 32,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது அது தற்போது 92,300 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொழிற்கடன் வழங்குவது இந்த காலளவில் 86 சதவிகிதமாக கர்நாடகாவில் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தொழிற்கடன் வழங்குவது 45%தான் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close