[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நியூசி. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண் உடல் கேரளா வந்தது

body-of-kerala-student-killed-in-nz-mosque-attack-arrives-home

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கேரள மாணவியின் உடல் கேரளாவுக்கு இன்று காலை வந்து சேர்ந்தது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் கடந்த 15 ஆம் தேதி நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், மெகபூப் கோகார், ரமீஸ் வோரா, ஆசிப் வோரா (குஜராத்), ஓஸைர் காதிர் (ஐதராபாத்), அன்சி அலிபாவா (கேரளா) ஆகிய ஐந்து இந்தியர்களும் பலியாயினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான அன்சி அலிபாவா (23), கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரைச் சேர்ந்தவர். கணவர் அப்துல் நாசருடன் நியூசிலாந்தில் வசித்து வந்தார். கடந்த வருடம்தான் அன்சி, அங்கு சென்றுள்ளார். அங்குள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்து வந்தார்.  சம்பவம் நடந்த அன்று தனது கணவருடன் மசூதிக்குச் சென்றார்.

 பெண்கள் பகுதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் கணவன் கண்முன்பே ரத்த வெள்ளத்தில் சாய்ந்திருக்கிறார் அன்சி. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்துல் நாசர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

அன்சியின் உடல் 10 நாட்களுக்குப் பிறகு கொச்சிக்கு இன்று அதிகாலை வந்தது. அவரது உடலை அங்கிருந்து பெற்ற அவர் உறவினர்கள், கொடுங்கல்லூருக்கு கொண்டு சென்றனர். காலை 11 மணி வரை அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் படுகிறது. பிறகு சேரமான் ஜும்மா மஜித் அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close