[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

கட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்

aitc-denies-dropping-congress-from-party-name

திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியின் பெயரில் இருந்து, ’காங்கிரஸ்’ என்ற வார்த்தையை நீக்கவில்லை என்று அந்தக் கட்சித் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியிலிருந்து 1998 ஆம் ஆண்டு பிரிந்த மம்தா பானர்ஜி  திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரை தனது கட்சிக்கு சூட்டினார். 21 ஆண்டுகளுக்குப் பின், கட்சியின் பெயரில் இருந்து, ‘காங்கிரஸ்’ என்ற வார்த்தையை அவர் நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. 

திரிணாமுல் கட்சிக்கான புதிய லோகோ தயாரிக்கப்பட்டதாகவும் இந்த லோகோ கடந்த ஒரு வாரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார்.

’அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில்தான் தேர்தல் கமிஷனில் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெயரும் சின்னமும் தேர்தல் கமிஷனில் 1998 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டவை. அதை மாற்றும் எண்ணமில்லை’’ என்று அந்தக் கட்சி வெளியிடுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close