[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

செல்ஃபி எடுக்க முயன்ற நபரை தூக்கி வீசிய கோயில் யானை

elephant-attack-man-who-try-to-take-selfie-with-elephant

கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்ற நபரை கோயில் யானை தூக்கி வீசி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரவக்காடு ஸ்ரீதேவி கோயிலில் கட்டப்பட்டுள்ள இரு யானைகளில், ஓமலூர் கோவிந்தகுட்டி எனும் யானையிடம் செல்ஃபி எடுக்க ஒரு நபர் முயல்கிறார். அப்போது, மரத்தில் கட்டப்பட்டுள்ள யானை அந்த நபரை தூக்கி வீசுவதுடன், உடம்பை லேசாக  இழுத்து முன்வந்து மேலும் தாக்குகிறது.

அருகிலிருந்த பாகன் உட்பட பொதுமக்கள் யானையை திசைதிருப்ப முயல்வே, தாக்கப்பட்ட நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தையும், அங்கு வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மற்றொரு நபர் பதிவு செய்துள்ளார். தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

வன விலங்குகளிடம் செல்ஃபி மோகத்தினால் அருகாமையில் சென்றால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்.  தாக்கப்பட்ட நபர், புன்னப்ரா குன்னம்பள்ளி பகுதியை சேர்ந்த ட்ரக் ஓட்டுனரான ரனீஷ் என்பது தெரியவந்துள்ளது. பலத்த காயமுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : செல்ஃபிகேரளாKeralaSelfie
Advertisement:
Advertisement:
[X] Close