[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

இந்தியாவில் 2,293 அரசியல் கட்சிகள்: 2 மாதத்தில் 149 கட்சிகள் பதிவு

india-now-has-2-293-political-parties

இந்தியாவில் மொத்தம் 2,293 அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் 149 கட்சிகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசார பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதற்கிடையே, இந்தியாவில் எத்தனை அரசியல் கட்சிகள் உள்ளன என்ற தக வல் வெளியாகியுள்ளது. இதில், கடந்த 9-ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் அடங்கியுள்ளது.

அதன்படி மொத்தம் 2,293 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய மற்றும் 59 மாநில கட்சிகள் இதில் அடங்கும்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் 9 ஆம் தேதி வரை மட்டும் 149 கட்சிகள் புதிதாகp பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கோயம்புத்தூரில் இருந்து புதிய தலைமுறை மக்கள் கட்சி, தெலங்கானாவில் இருந்து பரோசா கட்சி, டெல்லியில் இருந்து, அனைத்தையும் விட பெரிய கட்சி, பீகாரில் இருந்து பகுஜன் ஆசாத் கட்சி உள்ளிட்டவை அடங்கும்.

இந்தக் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கப்படவில்லை. இலவச சின்னங்களாக ஆணையம் ஒதுக்கியிருக்கும் சின்னங்களில் இருந்து ஒன் றை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

2016-ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையம், மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு எழுதிய கடிதத்தில், 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிடாத இக்கட்சிகள், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்குp பயன்படுத்தப்படுவதாகத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close