[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

உ.பி.யில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியில்லை- ராஜ் பாபர்

congress-says-won-t-contest-7-lok-sabha-seats-in-up-leaves-them-for-mayawati-akhilesh-yadav-alliance

உ.பி.யில் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்காக 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் மாநில தலைவர் ராஜ் பாபர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தமாக 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ்- மாயாவதி கூட்டணி இணைந்து
போட்டியிடுகிறது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு 37 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 38 தொகுதிகளும்
ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ராஜ்டிரிய லோக் தள் கட்சிக்கு இக்கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா
காந்தியும் போட்டியிடுகின்றனர். இதனால் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை அகிலேஷ் யாதவ்- மாயவாதி கூட்டணி அறிவித்துள்ளது.

இந்நிலையில் உ.பி.யில் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்காக 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் மாநில
தலைவர் ராஜ் பாபர் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் மைன்புரி தொகுதி,
அகிலேஷ் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதி, ராஜ்டிரிய லோக் தள் கட்சியில் அஜித் சிங், ஜெயந்த்
சௌத்திரி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் மாயவாதி போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்ட 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என ராஜ் பாபர் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close