[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

நியூசி.துப்பாக்கிச் சூட்டில் 9 இந்தியர்கள் மாயம்: ஐதராபாத்தைச் சேர்ந்தவர் படுகாயம்!

9-indian-origin-people-missing-after-mosque-shootings

நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த 9 பேரை காணவில்லை. தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் மாயமாகியுள்ளார்.

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை நடைபெற்றுக் கொண் டிருந்தது. ஏராளமானோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவன் துப்பாக்கியால் தொழுகையில் ஈடுபட்டவர்க ளை நோக்கி சரமாரியாகச் சுட்டான். இதில் பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவன் அதைச் சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பினான். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தபோது, பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் அங்கு தொழுகை நடத்த சென்றனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடந்துக் கொண்டிருப்பதை அறிந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு இடத்தில் இருந்த லின் உட் மஸ்ஜித் மசூதியிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதிலும் பலர் சிக்கி உயிரிழந்தனர். 

இந்த மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 49 பேர் உயிரிழந்தனர். படுகாயமடை ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 9 இந்தியர்களை காணவில்லை என்று நியூசிலாந்துக்கான இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் கோலி தெரி வித்துள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத் தில் ஐதராபாத்தை சேர்ந்த அகமது இக்பால் ஜஹாங்கீர் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

(ஜஹாங்கீர்)

இதுபற்றி ஜஹாங்கீரின் சகோதரர் முகமது குர்ஷித் கூறும்போது, ’’ஜஹாங்கீர் கடந்த 12 வருடமாக நியூசிலாந்தில் ரெஸ்டாரன்ட் நடத்தி வரு கிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துப்பாக்கிச்சூடு நடந்த அல் நூர் மசூதியில் தொழுகை நடத்த செல்வார். நேற்றும் சென்றுள்ளார். அப் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர் நண்பர்கள் 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டனர். என் சகோதரர் உயிருக்குப் போராடிக் கொண் டிருக்கிறார். அங்கு மேலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. ஜஹாங்கீருக்கு மனைவியும் மூன்று  மற் றும்  ஐந்து வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த ஏழு மாதத்துக்கு முன் அவர் ஊருக்கு வந்திருந்தார்’ என்றார். குர்ஷித் குடும்பத்தினர் நியூசிலாந்து செல்ல உடனடி விசாவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 

இதே போல, ஐதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் பர்ஹஜ் அஷான் (வயது 31) என்பவர் மாயமாகியுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதி அருகிலேயே வசித்து வந்த பர்ஹஜ், தொழுகைக்குச் சென்றார். பின் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இவருக்கு 3 வயதில் மக ளும் ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி ஐதராபாத்தில் உள்ள பர்ஹஜின் தந்தை முகமது சையூதிதினிடம் நியூசிலாந்தில் இருந்து அவர் மனைவி போனில் நேற்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு இந்தச் சம்பவம் தெரிய வந்துள்ளது. அவர் குடும்பத்தினர், உடனடியாக நியூசி லாந்து செல்ல, ஐதராபாத் எம்.பி அசாவுதீன் ஓவைசியிடம் முறையிட்டனர். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தெரி வித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close