[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை திருவாரூரில் இருந்து தொடங்கினார் மு.க.ஸ்டாலின்

இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும்படி நிர்பந்திக்காதீர்கள் - உச்சநீதிமன்றம்

supreme-court-asks-ec-on-3-constituency-election

அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை பின்னர் நடத்துவதில் என்ன பிரச்னை என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை. தற்போது இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே 18 தொகுதிகளுடன் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என  திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை பின்னர் நடத்துவதில் என்ன பிரச்னை என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

மேலும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும்படி எங்களை நிர்பந்திக்காதீர்கள். 3 தொகுதி இடைத்தேர்தல் குறித்து மார்ச் 25க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close