[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

எத்தியோப்பிய விபத்து எதிரொலி: 35 விமானங்களை நிறுத்துகிறது ஸ்பைஸ்ஜெட்!

spicejet-to-cancel-around-35-flights-today-amid-boeing-737-max-8-crisis

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஸ்பைஸ்ஜெட் ஜெட் விமானம் தங்களது 35 விமானங்களை நிறுத்துகிறது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமா னத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.

ஐந்து மாதங்களில் போயிங் ரக விமானம் இரண்டாவது முறையாக விபத்தை சந்தித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் லயன் ஏர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் உயிரிழந்தனர். தற்போது எத்தியோப் பியாவில் இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு விபத்துமே ஒன்று போலவே நடந்துள்ளதாலும் இரு விமானங்களுமே போயிங் ரகத் தை சேர்ந்தவை என்பதாலும் இந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

இதையடுத்து ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்கள் அனைத்தையும் எத்தியோப்பியா நிறுத்தியது. அதே போல சீனா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி உட்பட பல நாடுகள், போயிங் ரக விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவும் இந்த ரக விமானங்களை இயக்க நேற்று முன் தினம் தடை விதித்தது. இன்று மாலை 4 மணிக்குப் பிறகு இந்த ரக விமானங்கள் பறக்க அனுமதிக்கப் படாது என்று கூறியிருந்தது.

இந்தியாவில், ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்களை அதிகமாக இயக்கி வருகின்றன. இதில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குத் தான் அதிகப் பாதிப்பு என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தங்களது 35 விமானங்களை இன்று ரத்து செய்கிறது. 

அந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், வேறு விமானங்களில் அனுப்பப்படுவர். இதை பயன்படுத்தி, விமானக் கட்ட ணம் உயர்த்தப்படாது என விமான நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close