[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

“காங்., கொள்கைகள் காந்தியத்திற்கு எதிரானது- பிரதமர் மோடி

congress-policy-against-for-gandhi-pm-modi

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் காந்தியத்திற்கு எதிரானவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் உப்புக்கு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத்தில் உள்ள தண்டி கடற்கரையை நோக்கி காந்தி நடைபயணம் சென்றார். அதன் 89-ஆவது நினைவு நாளையொட்டி வலைப்பூவில் பதிவிட்டுள்ள மோடி, காந்திய சிந்தனைக்கு எதிரான கொள்கையே காங்கிரஸின் கலாசாரமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

சமத்துவமின்மை, சாதிப் பாகுபாடு ஆகியவற்றில் காந்திக்கு நம்பிக்கை கிடையாது எனத் தெரிவித்துள்ள மோடி, ஆனால் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த காங்கிரஸ் ஒருபோதும் தயங்கியதில்லை என புகார் கூறியுள்ளார். மிக மோசமான சாதிக் கலவரங்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான படுகொலைகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றவையே என பிரதமர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் என்பதும், ஊழல் என்பதும் ஒத்தக் கருத்துடைய சொற்களாகிவிட்டன என்பதை நாடு அறிந்து வருவதாக மோடி கூறியுள்ளார். பாதுகாப்புத்துறை, தொலைத்தொடர்புத்துறை உள்பட பலவற்றில் காங்கிரஸ் ஊழல் செய்துள்ளதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார். வாரிசு அரசியலை காந்தி வெறுத்தார் எனக்கூறியுள்ள மோடி, வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை என்பதே காங்கிரஸ் கடைபிடிக்கும் கொள்கை எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close