[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

பணமதிப்பிழப்பு விவகாரம் : பிரதமரின் கருத்தை ஏற்க மறுத்த ஆர்பிஐ

rbi-had-objections-to-notes-ban-agreed-in-public-interest-reveals-rti

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்திற்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இனிமேல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியதோடு, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அப்போது தெரிவித்தார். 

முன்னதாக பிரதமர் மோடி ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் சிலர் இந்த கருத்தை ஏற்க மறுத்துள்ளனர். 

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் `மினிட்ஸ்' எனப்படும் நிகழ்ச்சி நிரல்கள் குறித்த பதிவில் இடம்பெற்றுள்ளது. அதன் மூலம் இந்தத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

அப்போது, கறுப்புப் பணத்தை வைத்துள்ளவர்கள் பெரும்பாலும் அதை ரியல் எஸ்டேட், தங்கம் எனச் சொத்துகளாக வைத்துள்ளதாகல் இந்த அறிவிப்பு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனக் கூறியுள்ளனர். 

கறுப்புப் பணம் என்பது ரூ. 400 கோடி அளவில்தான் உள்ளது என்றும், புழக்கத்துக்கு விடப்பட்டுள்ள மொத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது மிகச் சிறிய எண்ணிக்கைதான் என்றும் ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் உயர் மதிப்பு ரூபாய் நோட்டு தடையால் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற அரசு தரப்பின் வாதத்தைப் பொது நலன் கருதி ஏற்று, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கடைசியில் கூறியதாக `மினிட்ஸ்' தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close