[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

சாதனையாளர்களின் பட்டியலில் மம்தா புகைப்படம்: நெட்டிசன்கள் கிளப்பும் சர்ச்சை 

mamata-banerjee-s-photo-among

‘வங்கத்தின் புகழ்பெற்ற ஆளுமைகள்’ என்ற பெயரில் வைக்கப்பட்ட பேனரில் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் பிதான் நகர் அருகே பரபரப்பான சாலையில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 'வங்கத்தின் புகழ்பெற்ற ஆளுமைகள்' என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருக்கும் அந்த பேனரில் இரண்டு வரிசைகளில் மேற்கு வங்கத்தின் சாதனையாளர்கள் 13 பேரின் புகைப்படங்கள் இடம்பிடித்துள்ளன. அதில் சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், ராம் மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் உள்ளிட்டோரும் உள்ளனர். 

சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக, ஆன்மீக சாதனையாளர்கள், அறிவியல் மற்றும் அரசியலில் சாதித்தவர்கள் என்ற அடிப்படையில் இந்தப் புகைப்படங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பேனரின் கடைசி புகைப்படமாக மம்தா பானர்ஜியின் புகைப்படமும் இடம் பிடித்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைப் பெரிய தலைவர்களின் வரிசையில் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கல்லூரி மாணவர் ஒருவர், ''மேற்கு வங்கத்தின் தவிர்க்கமுடியாத அரசியல்வாதியாக மம்தா பானர்ஜி இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் வங்கத்தின் புகழ்பெற்ற சாதனையாளர்கள்' வரிசையில் அவர் புகைப்படம் இருப்பதை ஏற்கமுடியாது” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்கத்தின் தீயணைப்புத்துறை அமைச்சர் சுஜித் போஸ், ''பேனர் விவகாரம் குறித்து என் கவனத்துக்கு எதுவும் வரவில்லை. அது என்ன பிரச்னை என்றே தெரியவில்லை. தெரியாத விஷயம் குறித்து நான் எப்படி கருத்து கூற முடியும்'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close