[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை

delhi-high-court-stays-case-against-ttv-dhinakaran

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க மார்ச் 20 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் ஓபிஎஸ்-ஈபிஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்புக்கு இடையே போட்டி நிலவியது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

இதுதொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி காவல்துறையினர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே இவ்வழக்கை விசாரிக்க தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க மார்ச் 20 வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close