[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கண்ணில் மிளகாய் பொடி தூவி...பாறாங்கல்லால் மண்டையில் ஒரு போடு..: 12 கொலைகள் செய்த கொடூரன் கைது!

serial-killer-admits-to-murdering-12-arrested

கண்ணில் மிளகாய் பொடி தூவி, நடுமண்டையில் பாறாங்கல்லை போட்டு, 12 பேரை கொலை செய்த, சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளான்.

தெலங்கானா மாநிலம் விக்ராபாத் மாவட்டத்தில் உள்ள சொக்கம்பேட்டைச் சேர்ந்த பலராஜ் என்பவர், பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி மண்டை உடைந்த நிலையில் கொடூரமாகக் கொல்லப்பட்டு கிடந்தார். அரசு பள்ளியில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய இவரது கொலை பற்றி, போலீசார் தீவிரமாக விசாரித்தனர். பலராஜின் போன் அவ்வப்போது ஆன் செய்யப்படுவதை வைத்து, அருகில் உள்ள சவுதாபூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது யூசூப் என்கிற பாஷாவை கைது செய்தனர். அவர், பலராஜை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

குறைந்த விலைக்கு ஆடுகள் வாங்கித் தருவதாக பலராஜை அழைத்துச் சென்றிருக்கிறார் பாஷா. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வந்ததும் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை, பலராஜ் கண்களில் தூவியிருக்கிறார். அவர் தடுமாறி கண்ணை கசக்க, அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து நடுமண்டையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பலியா னார் பலராஜ். பிறகு அவர் வைத்திருந்த 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மொபைல் போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சத்தம் போடாமல் வந்துவிட்டார் பாஷா.

பலராஜ் கொல்லப்படுவதற்கு முன் இவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த சிலர், போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பாஷாவிடம் விசாரித்தனர். முதலில் மறுத்த பாஷா, பிறகு வசமாகச் சிக்கிக்கொண்டார். ஆனால், போலீசாருக்கு இதிலெல்லாம் பிரச்னை இல்லை. அவர், இதுவரை 12 கொலைகள் செய்திருக்கிறார் என்பதைக் கேட்டதும்தான் அதிர்ச்சி.

2003 ஆம் ஆண்டில் இருந்தே, கொலைகள் செய்வதை வழக்கமாக்கி இருக்கிறார் பாஷா. ஒவ்வொரு கொலையையும் இதே ஸ்டைலில் நடத்தியுள்ளார். அதாவது, மிளகாய் பொடியை கண்ணில் தூவிவிட்டு, பாறாங்கல்லால் மண்டையை உடைப்பது. இந்தக் கொலைகளை தெலங் கானாவின் தபீர்புரா, சத்நகர், ஜட்செர்லா, விக்ராபாத், கோத்தூர், கர்நாடகாவில் ராய்ப்பூர் ஆகிய பகுதிகளில் செய்திருக்கிறார். இதோடு, பண்டல குடா, சத்நகர், ராஜேந்திரநகர், ஜட்செர்லா ஆகிய பகுதிகளில் திருட்டு வேலையையும் செய்திருக்கிறார் 

பாஷாவுக்கு இரண்டு மனைவி. இது தவிர சில பாலியல் தொழிலாளிகளிடமும் பழக்கம். முதலில் குடும்பத்தைக் காப்பாற்ற புளி வியாபாரம் செய்திருக்கிறார். வருமானம் போதவில்லை. ஜாலியாக செலவு செய்ய, அதிகமாக பணம் தேவை என்று முடிவு செய்த பாஷா, கொலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார். முதலில் முன் பின் தெரியாத ஆட்களிடம் நன்கு பழகுவார். இவர் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்ததும், ’’காட்டுக் குள் புதையல் இருக்கிறது, இடத்தைக் காட்டுகிறேன், அதற்கு பணம் வேண்டும். பணத்தோடு வாங்க’’ என்று ஆசை வார்த்தைக் கூறுவார். நம்பி வருபவர்களை, போட்டுத்தாக்கிவிட்டு, பணத்தோடு எஸ்கேப் ஆகிவிடுவார்.  

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் பாஷாவை கைது செய்திருக்கிறது போலீஸ். அந்த வழக்கில் ஜாமீனில் வந்தவர்தான், இப்போ து மீண்டும் ஒரு கொலையை செய்திருக்கிறார்.

‘’2017 ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டபோது, பழைய விஷயங்கள் எதையும் சொல்லவில்லை பாஷா. இப்போது விசாரித் தபோது 3 கொலைகள் செய்ததாகச் சொன்னார். தொடர்ந்து விசாரித்தபோதுதான், 12 கொலைகள் செய்திருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்’’ என்றார் மகபூப்நகர் போலீஸ் எஸ்.பி, ரெமா ராஜேஸ்வரி. 

16 வயதில் இருந்தே கொலைகள் செய்து வரும் பாஷாவுக்கு இப்போது வயது 32. கைது செய்யப்பட்டுள்ள பாஷாவிடம் மேலும் விசாரித்து வருகிறது போலீஸ்!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close