[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

வளர்த்தவரை காப்பாற்ற பாம்புடன் போராடி உயிரைவிட்ட டைசன்

dog-dies-while-fighting-cobra-saves-master-s-family

தனது உரிமையாளரை காப்பாற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு ஒரு நாய் உயிரிழந்துள்ளது.

ஒடிசாவின் குர்டா மாவட்டத்தின் ஜாட்னியில் வசித்து வருபவர் அமன் ஷரிப். இவர் தனது பெற்றோர், பாட்டியுடன் அங்கு வசித்து வருகிறார். அவர் வீட்டில் டைசன் என்ற டால்மேஷன் வகை நாயையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு நாய் டைசன் வீட்டுக்கு வெளியே கடுமையாக குரைத்துக்கொண்டு இருந்துள்ளது. வெளியே வந்து பார்த்த போது டைசன் ஒரு பாம்பை கடித்துகொன்றுவிட்டு அருகிலேயே மயக்க நிலையில் நின்றுள்ளது. 

இது குறித்து பேசிய  அமன் ஷரிப், ''நான் வெளியே சென்று பார்த்த போது பாம்பை கடித்துக்கொன்று விட்டு அருகில் டைசன் நின்றிருந்தது. சிறிது நேரத்தில் டைசன் மயங்கியது. நான் டைசனை பரிசோதித்தேன். அதன் முகத்திலும், காலிலும் பாம்பு கடித்த தடம் இருந்தது. உடனடியாக அந்த நேரத்தில் கால்நடை மருத்துவமனைக்கு நான் போன் செய்தேன். ஆனால் மருத்துவமனை மூடப்பட்டு இருந்தது. தனியார் கால்நடை  மருத்துவமனைகளும் திறந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் டைசன் மயங்கிய நிலையிலேயே உயிரிழந்துவிட்டது'' என்று தெரிவித்தார்

இந்த சம்பவம் குறித்து பேசிய விலங்கியல் ஆர்வலரான சுவீண்டு மாலிக், ''மனிதர்களுக்கான மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்குவதைப் போல், கால்நடைகளுக்கும் 24 மணி நேர மருத்துவமனை தேவை. சரியான சிகிச்சை இருந்திருந்தால் நாய் டைசனை காப்பாற்றி இருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

தனது உரிமையாளரை காப்பாற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு தன் உயிரைவிட்ட டைசனை விலங்கு ஆர்வலர்களும், நாய் பிரியர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close