[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

“கடல் மார்க்கமாக இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்” - சுனில் லன்பா எச்சரிக்கை

post-pulwama-navy-chief-admiral-lanba-warns-of-sea-borne-terror-attack

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்தப் பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பால்கோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கினார். பின்னர் கடந்த 1ஆம் தேதி அவரை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.

           

இந்நிலையில் இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா இந்தோ- பசிபிக் பிராந்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அதில் “பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சி பெற்று வருவது தொடர்பான தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அத்துடன் இந்தோ- பசிபிக் பிராந்தியம் கடந்த சில ஆண்டுகளில் அதிக அளவில் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது. மேலும் உலக அளவில் பயங்கரவாத சக்திகள் வளர்ந்து வருகின்றன. இதனால் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது” எனக் கூறினார்.

         

2008ல் மும்பையில் ஏற்கெனவே நடந்த பயங்கரவாத தாக்குதல் கடல் மார்க்கமாக நடந்ததுதான். இந்தத் தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள்தான் நடத்தினர் குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close