[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

மனைவியை கைவிட்ட 45 வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து

passports-of-45-nris-cancelled-for-abandoning-wives

மனைவியை கைவிட்டு சென்ற 45‌ வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடைய மனைவியை சட்டவிரோதமாக கைவிட்டு விடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைத் தடுக்க, தாயகம் வந்து திருமணம் செய்துக் கொள்ளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்துகொண்ட 7 நாட்களுக்குள் பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ‌ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, வெளிநாட்டு வாழ் கணவ‌ர்களால் கைவிடப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், 45 என்.ஆர்.ஐக்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக, திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close