[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

“அதே பிரிவில் அமர்த்தப்படுவார் அபிநந்தன்” - விமானப்படை தளபதி பேட்டி 

iaf-chief-said-abinanthan-will-be-join-with-same-category

உடல்தகுதி உறுதி செய்யப்பட்டபின் அதே பிரிவில் அபிநந்தன் பணியமர்த்தப்படுவார் என விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. அப்போது பயங்கரவாதிகள் ஏராளமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

இதைத்தொடர்ந்து விமானப்படை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

மேலும் முகாம்களை அழித்ததற்காக பதிலடி கொடுக்க வந்த பாகிஸ்தான் எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது. அப்போது அந்த விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு தற்போது தாயகம் திரும்பி மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்திய விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “இந்திய விமானப்படை விமானங்கள் இலக்கை சரியாக தாக்கின. நாம் இலக்கை சரியாக தாக்கியதால்தான் அவர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். மிக் விமானங்களை ஏன் பயன்படுத்தக்கூடாது. மிக் விமானங்கள் பழைய விமானங்கள் அல்ல. நவீனமயமாக்கப்பட்டவை. நவீனப்படுத்தப்பட்டதால் பாகிஸ்தானின் எஃப் 16க்கு எதிராக இந்தியாவின் மிக் - 21 போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் எத்தனை பேர் இருந்தனர்? எவ்வளவு பேர் இறந்தனர் என நம்மால் கணக்கிட முடியாது. விமானப்படை தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் இறந்தனர் என என்பதை நாங்கள் கூற முடியாது. அரசுதான் தெரிவிக்க வேண்டும். 

அபிநந்தனின் உடல்தகுதி உறுதிபடுத்தப்பட்ட பின்னரே அவர் பணியில் சேர்க்கப்படுவார். உடல்தகுதி உறுதி செய்யப்பட்டப்பின் அதே பிரிவில் அபிநந்தன் சேர்க்கப்படுவார். செப்டம்பர் மாதம் ரஃபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்தார். 

பயங்கரவாத முகாம்கள் மீதான விமானப்படை தாக்குதலுக்கு பின் அதன் தளபதி அளிக்கும் முதல் பேட்டி இதுவாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close