[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

எல்லையில் பதட்டம்: சுரங்க விபத்து பகுதியில் இருந்த கடற்படை, ராணுவத்துக்கு திடீர் அழைப்பு!

border-tension-navy-army-personnel-at-meghalaya-mine-called-back

எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக, மேகாலயா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள வர்களின் உடல்களை மீட்பதில் ஈடுபட்டு வரும் கடற்படை மற்றும் ராணுவத்தினர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். 

மேகாலயாவில் உள்ள கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில், டிசம்பர் 13 ஆம் தேதி சட்ட விரோத சுரங்கத்தில் நிலக்கரி எடுக்க, 13 தொழிலாளர்கள் சென்றனர். அப்போது, மழை வெள்ளம் காரணமாக அருகில் இருந்த லைத்தின் ஆற்றின் தண்ணீர், சுரங்கத்துக்குள் புகுந்தது. இதனால் ’எலி வளை சுரங்கம்’ எனப்படும் சிறிய வாசலை கொண்ட சுரங்கத்துக் குள் நுழைந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். 

அவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, கடற்படை, தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் தீவிர மாக ஈடுபட்டு வந்தனர். சுரங்கத்துக்குள் தண்ணீர் வற்றாததால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. அது அசாமைச் சேர்ந்த அமிர் ஹூசைன் என்பது தெரிய வந்தது. அணிந்திருந்த மோதிரத்தை வைத் து அவரது குடும்பத்தினர் அமிரை அடையாளம் கண்டனர். பின் அவரது உறவினர்களிடத்தில் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்த நிலையில் மேலும் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் அழுகிய நிலையில் இருந்த அந்த உடலை, மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலையில் அந்த உடல், இந்திய கடற்படை ரோபோ மூலம் கடந்த 27 ஆம் தேதி மீட்கப் பட்டது. 

மேகாலயா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த உடல், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது, லும்தாரி கிராமத்தைச் சேர்ந்த டிமோன்மி கர்-ரின் உடல் என்பது தெரியவந்தது. பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த கடற்படை வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். 

இதுபற்றி கிழக்கு ஜைண்டியா ஹில்ஸ் மாவட்ட நிர்வாக செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘’கடற்படையுடன் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வர்களும் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். ஜனவரி 29 ஆம் தேதி, ராணுவம் மீட்புக் குழுவுடன் இணைந்தது. இந்நிலையில் மேலிட உத்தர வுப்படி, கடற்படை மற்றும் ராணுவத்தினர் இன்று திரும்புகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபடும்’’ என்றார்.

எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படு கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close