[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

“அபிநந்தன்தான் உண்மையான ஹீரோ”  - ரன்வீர் சிங்

ranveer-singh-on-iaf-hero-abhinandan-s-return-today-is-a-good-day-but-let-s-not-forget-pulwama

இது ஒரு நல்ல நாள் எனவும் ஆனால் புல்வாமாவை மறக்க முடியாது எனவும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்தியா அழித்தது. 

இந்தத் தாக்குதலில் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் போர் கைதியாக சிக்கினார். அவரை இன்று  விடுவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தனை ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், “இன்று ஒரு நல்ல நாள். ஆனால் புல்வாமா தாக்குதலை மறக்க முடியாது. அபிநந்தன் ஒரு ரியல் ஹீரோ. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அபிநந்தன் தன்னை தானே திறமையாக வழிநடத்திக் கொண்டார். அவர்தான் உண்மையான ஹீரோ” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close