[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

“இந்திய மக்கள்தான் என் குடும்பம்; அவர்களுக்காக வாழ்வேன்” - பிரதமர் மோடி 

today-we-are-in-an-era-where-the-news-reads-armed-forces-have-full-freedom-to-do-what-they-want-pm-modi

இந்திய மக்கள்தான் என் குடும்பம், அவர்களுக்காக வாழ்வேன், அவர்களுக்காக வீழ்வேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தம்பிதுரை எம்.பி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை உட்பட பலர் வரவேற்றனர். 

இதையடுத்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தேஜஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிறகு, அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விமானப்படை வீரர் அபிநந்தனும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன். 

ஜெயலலிதாவின் தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் பாதைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 1964 பேரிடரில் இந்த ரயில்பாதை சேதமடைந்தது. 50 ஆண்டுகளாக யாரும் கவனம் செலுத்தவில்லை.  மதுரை - சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ், மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்டது. வரும் தலைமுறைக்காக உள்கட்டமைப்பு வசதிகளை துரிதமாகச் செய்து வருகிறோம். 

உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. பாம்பன் ரயில் மேம்பாலம் புதியதாகவும் தற்போது அமைக்கப்பட இருக்கிறது. மக்களுக்கான மிகப்பெரிய காப்பீடான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட திட்டம், அதே மாதத்தில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. 1.10 கோடி விவசாயிகள் நேரடியாக வங்கிக் கணக்கில் முதல் தவணை தொகையை பெற்றுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிக வேகமாகச் செயல்படுகிறது. தேர்தலின்போது விவசாயக்கடனை தள்ளுபடி செய்யும் காங்கிரஸ் அதன்பிறகு அவர்களை பற்றி கவலைப்படாது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மையோடு இந்த அரசு 2014 ல் அமைந்தது. துணிச்சலாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் அரசு தேவை என்பதை மக்கள் தெளிவாகத் தெரிவித்திருந்தனர். 

நாட்டில் ஊழல் செய்தவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டிருக்கிறார்கள். முந்தைய அரசு மீனவர்களின் வாக்கை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது உள்ள அரசு இஸ்ரோ உற்பத்தி செய்த கடல்சார் சாதனங்கள் மீன்வர்களுக்குத் தந்துள்ளது. ரூ. 300 கோடியை ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்காக ஒதுக்கியிருக்கிறோம். விவசாய கடன் அட்டை திட்டமானது மீனவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நான் இன்று இருப்பேன். நாளை சென்று விடுவேன். ஆனால் இந்தியா எப்போதும் இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக நாட்டை ஆண்டவர்கள் நடுத்தர மக்களை பற்றி கண்டுகொள்ளவில்லை. புதிய இந்தியாவில் உரி, புல்வாமா தாக்குதல்களுக்கு இந்திய வீரர்கள் என்ன பதில் அளித்தார்கள் என்பதை மக்கள் பார்த்து வருகிறார்கள். ராணுவ வீரர்களின் ஒரே தகுதி ஒரே ஓய்வூதியம் பற்றி முந்தைய அரசு கண்டுகொள்ளவில்லை. சிந்தித்துகூட பார்க்கவில்லை. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக, ஒரே ரேங்க், ஒரே ஓய்வூதியம் எனும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தியது. 

2004 இருந்து 2014 வரை பல இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பதிலடி என்பது வட்டியும் முதலுமாக திருப்பி தரப்படும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு நம்முடைய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ராணுவத்தின் செயல்பாடுகள் அதன் வலிமையை நமக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. இந்திய மக்கள்தான் என் குடும்பம். அவர்களுக்காக வாழ்வேன். அவர்களுக்காக வீழ்வேன். மக்கள் விரும்புவது நேர்மையையும் பாதுகாப்பையும்தான், குடும்ப அரசியலை அல்ல. வாக்கு வங்கி அரசியலை அல்ல” எனப் பேசினார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close