[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டெல்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

“எவ்வளவு துணிச்சலுடன் பேசுகிறான் பாருங்கள்" - விமானி அபிநந்தனின் தந்தை

message-from-abinanthan-dad-about-him

உங்களின் அக்கறைக்கும் விருப்பத்திற்கும் நன்றி என விமானி அபிநந்தனின் தந்தை வர்தமான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. 

இதையடுத்து நேற்று காலை இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானியை பாகிஸ்தான் சிறைபிடித்தது. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

இதனிடையே பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட விமானி அபிநந்தன் டீ குடித்து கொண்டு பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.  இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது.

அபிநந்தனின் உறவினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதலும் நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உங்களின் அக்கறைக்கும் விருப்பத்திற்கும் நன்றி என விமானி அபிநந்தனின் தந்தை வர்தமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், “உங்களின் அக்கறைக்கும் விருப்பத்திற்கும் நன்றி நண்பர்களே. நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவனுடைய ஆசிர்வாதத்திற்காக. அபி எவ்வித காயங்களும் இல்லாமல் உயிருடன் இருக்கிறான். மனதளவிலும் நன்றாக இருக்கிறான். அவன் எவ்வளவு துணிச்சலாக பேசுகிறான் பாருங்கள். அதுதான் உண்மையான படை வீரர்.

அபியை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையாலும் அவன் நல்லபடியாக நாடு திரும்புவான் என்ற நம்பிக்கை உள்ளது. உடலளவிலும் மனதளவிலும் எவ்வித சித்திரவதைகளையும் சந்திக்காமல் அபி நாடு திரும்ப கடவுளை வேண்டி கொள்கிறேன். இந்நேரத்தில் எங்களுடன் துணை நிற்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவாலும் பலத்தினாலும் தான் எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close