[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

பாகிஸ்தான் ராணுவ வீரரை சிறைபிடித்து பத்திரமாக ஒப்படைத்த இந்தியா ! ஒரு நெகிழ்ச்சியான வரலாறு

how-i-captured-and-saved-india-s-first-prisoner-of-war-in-1971

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானியை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியுள்ள நிலையில், இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானி பத்திரமாக அந்நாட்டிடம் ஒப்படைத்த சம்பவமும் ஏற்கெனவே நடைபெற்றிருக்கிறது.

1971-ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே வங்கதேசம் போர் நடைபெற்றது. அப்போரின்போது போர்க் கைதியாக பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விமானி அந்நாட்டிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். பின்னாளில் அவர் பாகிஸ்தான் விமானப் படையின் தலைமை பதவியையும் வகித்தார். அந்தப்போரின் போது முக்கிய பங்காற்றிய ராணுவ வீரரான லெப்டினன்ட் ஜெனரல் பனாங் இதுகுறித்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

அதாவது, “ வங்கதேச போர் என்பது அதிகாரப்பூர்வமாக 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி தான் தொடங்கியது. ஆனால் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நாங்கள் கிழக்கு பாகிஸ்தானை நோக்கி முன்னெடுத்துச் சென்றோம். சீக் படையின் 4-வது பட்டாலியன் பிரிவில் பொறுப்பு அதிகாரியாக நான் பணியாற்றினேன். ஜேசூரின் வடமேற்கு பகுதியிலிருந்து 15-20 கி.மீ தொலைவில் சௌகாசா என்ற இடத்தில் கடாபக் ஆற்றின் பாலத்தின் வழியாக நாங்கள் முன்னெடுத்துச் சென்றபோது எதிரிகள் பாலத்தை சேதப்படுத்த முயற்சித்தனர். அப்போது எங்களுக்கும் எதிரிக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானுக்கு அதிக இழப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் விமானப் படையும் துரித கதியில் செயல்பட்டது. நவம்பர் 21-ஆம் தேதி முதல் நவம்பர் 22-ஆம் தேதி மதியம் வரை பலமுறை பாகிஸ்தான் விமானப் படைகள், இந்திய நிலைகளுக்கு எதிராக பறந்தது. அதற்கு எதிராக நம் விமானப் படைகளையும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் போர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று பதில் வந்தது.

நவம்பர் 22-ஆம் தேதி எங்கள் தளவாடத்திலிருந்து தலைமையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் பகுதியை நோக்கி பாகிஸ்தான் விமானப் படையின் 3 விமானங்கள் வேகமாக பறந்து வருவதை கண்டேன். அவர்கள் எங்கள் பகுதியை குறிவைத்து வருவதையும் உணர்ந்தேன். குண்டுகளை வீசுவதற்காக அவர்கள் 2000 அடியிலிருந்து 500 அடிக்கு கீழே இறங்கி வருவதுபோன்று தெரிந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் விமானப் படைக்கு தக்க பதிலடி கொடுத்து சுட்டது இந்திய விமானப் படை. அப்போது பாகிஸ்தான் விமானப் படை விமானிகள் பாரசூட் மூலம் குதித்து தப்ப முயன்றனர். அவர்களில் இருவர் பாகிஸ்தானுக்கே சென்ற நிலையில் ஒருவர் மட்டும் இந்திய எல்லைக்குள் வந்து விழுந்தார்.

உடனே எங்கள் வீரர்கள் கோபத்தில் அவரை தாக்கிவிடுவார்கள் என்பதால் உடனடியாக அவரை நோக்கி வேகமாக ஓடி காப்பாற்ற முயன்றேன். ஆனால் நான் போகும் முன்பாகவே இரண்டு மூன்று வீரர்கள் அவரை தாக்கிக் கொண்டிருந்தனர். உடனடியாக அதனை நான் தடுத்து நிறுத்தினேன். அத்துடன் விமானி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தேன். அந்த பைலட் உயரமாகவும் நல்ல கம்பீரத்துடனும் காணப்பட்டார். அவரது தலையில் சிறிய வெட்டு இருந்தது. ஆனாலும் முகம் மிகவும் தைரியமாக காணப்பட்டது.

விதிமுறைகள்படி உடனடியாக பட்டாலியன் தலைமையகத்திற்கு நான் அழைத்துச் சென்று தேவையான மருத்துவ உதவிகள் செய்தேன். அத்துடன் டீ வாங்கிக் கொடுத்து சிறிது விசாரணையையும் மேற்கொண்டோம். அப்போது அவரது பெயர், பர்வைஸ் குரேஷி மெஹதி என்பது தெரியவந்தது. அவர் தனது சட்டைப் பையில் மனைவியின் புகைப்படத்தையும் வைத்திருந்தார். கைக்கடிகாரம், 9எம்எம் பிஸ்டல் உள்ளிட்டவற்றையும் வைத்திருந்தார். அவரை ஜெனிவா ஒப்பந்த விதிகளை மீறாமல் கையாண்டோம். மிகவும் தைரியமானவர் அந்த விமானி. அவர் பாகிஸ்தான் வசம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். பின்னாளில் அவர் பாகிஸ்தான் விமானப் படையில் தலைமை பதவியையும் வகித்தார்.” என்றார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close