[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

‘பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்’ - மும்பைக்கு உளவுத்துறை அறிவுறுத்தல்

iaf-air-strike-mumbai-on-high-alert-government-asks-schools-to-exercise-caution

பாகிஸ்தான் தரப்பிலிருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பாதுகாப்பை அதிகப்படுத்த கோரி மும்பை போலீசாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

அதேசமயம் இந்திய அத்துமீறலுக்குத் தகுந்த நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்து பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனால் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத முகாம்களை அழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கமளித்துள்ளார். 

ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் மேற்கொண்டு தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், எனவே, பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது என்றும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பாதுகாப்பை அதிகப்படுத்த கோரி மும்பை போலீசாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி மற்றும் நிறுவன அலுவலக ஊழியர்களுக்கு மஹாராஷ்டிர அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பஸ் உரிமையாளர்களின் சங்கம், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

மேலும் விமானப்படைத்தளம், கடற்படைத்தளம், ராணுவ முகாம்கள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தவும் மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close