[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

எல்லை மீறிய பாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா

pakistan-air-force-s-f-16-that-violated-indian-air-space-shot-down

போர் நிறுத்த ஒப்பந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் 4 பகுதிகளில் குண்டுவீசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் இந்திய அத்துமீறலுக்குத் தகுந்த நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்து பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனால் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் 4 பகுதிகளில் குண்டுவீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாக். விமானப்படையின் ‘எஃப் 16’ ரக போர்விமானங்கள் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி, குண்டுகளை வீசியதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய விமானப் படை பாகிஸ்தானின் ‘எஃப் 16’ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தானின் மற்றொரு விமானம் விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close