[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

“பயந்தோடின பாக். விமானங்கள்” - இந்திய அதிகாரிகள் தகவல்..!

pakistani-f16-turn-back-due-to-the-size-of-iaf

இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்ததும் பாகிஸ்தான் விமானப் படை திரும்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று காலை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை பொழிந்தது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. அத்துடன் பாகிஸ்தானில் நுழைந்து கைபர் பக்துன்வா பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்தும் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது.

இந்நிலையில் இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்ததும் பாகிஸ்தான் விமானப் படை திரும்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் இந்திய தரப்பில் தாக்குதலில் ஈடுபட்டபோது, பதிலடி கொடுக்கும் முயற்சியில் பாகிஸ்தானின் ‘எஃப்16’ ரக போர் விமானங்கள் இறங்கின. ஆனால் இந்திய போர் விமானங்களின் எண்ணிக்கையையும், பலத்தையும் பார்த்த பாகிஸ்தான் விமானப் படை, தாக்குதலை சமாளிக்க முடியாமல் பயந்து சென்றதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close