[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

ஆம்புலன்சில் கடத்தப்பட்ட ஆயிரத்து 800 கிலோ கஞ்சா பறிமுதல்

ambulance-carrying-rs-2-7-crore-worth-ganja-intercepted-in-andhra

ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து கடத்தப்பட்ட ரூ2.7 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள சப்பவரம் - பெந்துர்தி சாலைப் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா பொட்டலங்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று பிடிபட்டது. 

வாகனத்தை சோதனையிட்டதில், அதில் 1,813 கிலோ எடை கொண்ட 361 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு பொட்டலமும் 5 கிலோ எடை கொண்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களின் சந்தை மதிப்பு ரூ2.7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.  

போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் ஐதாராபாத்தின் ராஜேந்திர நகர் பகுதியில் 1020 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த இரண்டு நாட்களில், தற்போது மீண்டும் ஆயிரம் கிலோவுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை ஏற்றி வந்த வாகனம் ராய்ப்பூர் நகர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆம்புலன்ஸை ஓட்டிவந்த டிரைவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close