[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

காட்டுப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

supreme-court-orders-eviction-of-more-than-10-lakh-adivasi-and-forest-dwelling-families

காட்டுப் பகுதிகளில் வசிக்கும் 10 லட்சம் மக்களை வெளியேற்ற மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வன உரிமைகள் சட்டம் 2006 ஆம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் அரசு ஆண்டாண்டு காலமாக ஆதிவாசிகள் மற்றும் மக்கள் வசித்து வரும் வனப்பகுதிகளை அவர்களிடம் திரும்பி ஒப்படைப்பதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் இந்த சட்டத்தில் காட்டில் வசிக்கும் மக்கள் தங்களின் தேவைகளுக்காக காட்டு வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பகுதிகளிலுள்ள கிராமசபை குழு காட்டுப் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் அடிக்கடி வனத்துறை அதிகாரிகளுக்கும் காட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டுவந்தது.

இந்நிலையில், வன உரிமைகள் சட்டத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவிதா சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி கொண்ட அமர்வு விசாரித்தது. அவர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதில் காட்டுப் பகுதிகளில் வசிக்கும் உரிமை ரத்தான மக்கள் உடனடியாக காடுகளை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். 

அதன்படி அந்தந்த மாநில அரசுகள் வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதிக்குள் இந்த மக்களை காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். அத்துடன் மாநில அரசுகள் இந்த உத்தரவை செயல்முறைப் படுத்தியது தொடர்பான அறிக்கையையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் 16 மாநிலங்கள் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்குமுன் கடந்த 2002-2004 ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காட்டை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close