[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

பசுமை பட்டாசை எளிமையாக தயாரிக்க வழி காண வேண்டியதுதானே - உச்சநீதிமன்றம்

green-crackers-case-sc-asks-questions

பசுமை பட்டாசை எளிமையாக தயாரிக்க வழி காண வேண்டியது தானே என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருளை பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இதனிடையே பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தினால் பட்டாசு ஆலைகளை திறக்க முடியாத சூழல் சிவகாசியில் ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் பல லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இதனிடையே இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, பட்டாசு தொழில் முடக்கத்தால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ பசுமை பட்டாசு தயாரிப்பதை ஒப்புக்கொண்டதாக முதலில் கூறினீர்கள். பிறகு அது சிரமமானதாக இருக்கிறது என கூறுகிறீகள். எத்தனையோ புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது. பசுமை பட்டாசை எளிமையாக தயாரிக்க வழி காண வேண்டியது தானே. பட்டாசு வெடிக்க வேண்டும் அதே சமயம், அது சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத வண்ணமும் இருக்க வேண்டும். டெல்லியை விட மோசமான காற்றின் தரம் உள்ள நகரங்கள் நாட்டில் உள்ளது” எனத் தெரிவித்தனர். வழக்கு விசாரணை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close