[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

’’உன்னை யார் கல்யாணம் பண்ணுவா?ன்னு கேட்டாங்க’’:டாட்டூ காதலியின் ஆஹா அனுபவம்!

with-103-tattoos-this-21-year-old-is-india-s-most-tattooed-woman

டாட்டூ குத்திக்கொள்வது, இப்போதைய ஃபேஷன். நடிகைகளில் இருந்து விளையாட்டு பிரபலங்கள் வரை அனைவருக்கும் இருக்கிறது, டாட்டூ காதல்! விராத் கோலி, நயன்தாரா, த்ரிஷா, ஸ்ருதிஹாசன் என ஆரம்பித்தால் இந்தப் பட்டியல் நீளும். மேல்நாடுகளில் இதைக் குத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கைக் குறைவு. இருந்தாலும் இந்தத் தம்மாத்துண்டு உடலில், டாட்டூ குத்திக்கொள்ள ஓர் அளவு வேண்டாமா? 

தனது உடலில், வளைத்து வளைத்து 103 டாட்டூ குத்தியிருக்கிறார், 21 வயது தேஜஸ்வி பிரபுல்கர். மும்பையை சேர்ந்தவர். இவ்வளவு டாட்டூ குத்தியிருக்கும் இந்திய பெண் இவர்மட்டும்தான். அதிகமான டாட்டூ குத்திய இந்திய பெண் என்பதற்காக, லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றிருக்கிறார் தேஜஸ்வி! 

டாட்டூ மீது அப்படியென்ன காதல் இவருக்கு?

‘’17 வயசுல, முதல் டாட்டூ குத்தினேன். அது தேஜஸ்விங்கற என் பெயர். பலர் என் பெயரை சரியா சொல்ல மாட்டாங்க. தேஜஸ்வினின்னு கூப்பிடுவாங்க. சில பேர் தேஜாஸ்ரீன்னு கூப்பிடுவாங்க. இதனால, நம்ம பெயரை தெளிவா டாட்டூ குத்திட்டோம்னா, தப்பா கூப்பிடறவங்ககிட்ட காண்பிக்க வசதியா இருக்குமேன்னு ஆரம்பிச்சேன். அப்புறம் டாட்டூ பைத்தியமாகி, இப்ப நானே டாட்டூ ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டேன்’’ என்கிற தேஜ ஸ்வி, இதற்காக கல்லூரி படிப்பை, பாதியிலேயே முடித்துவிட்டாராம்.

’’நான் டாட்டூ ஆர்டிஸ்ட் ஆயிட்டேன்கறதால டிகிரி படிப்பு வேண்டாம்னு முடிவு பண்ணினேன். பிறகு உடல்ல நிறைய டாட்டூ குத்திக்கிட்டேன். ஒவ்வொரு டாட்டூவும் என் வாழ்க்கையில நடந்த சம்பவங்களை எனக்கு ஞாபகப்படுத்தற மாதிரி இருக்கும். என் ஃபிரண்ட்ஸ், சொந்தக்காரங்க, அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாருமே என்னை டாட்டூ பைத்தியம்னுதான் சொல்வாங்க. அதுக்காக எனக்கு கவலை இல்லை. இது என் விருப்பம். ‘உடம்பு பூரா இப்படி பண்ணி வச்சிருக்கியே, உன்னை யார் கல்யாணம் பண்ணுவா?’ன்னுலாம் கேட்டிருக்காங்க, தோழிகள். நான் சிரிச்சுக்கிட்டே கடந்திருவேன்’’ என்கிற தேஜஸ்வி, வெளியே சென்றால் வெளிநாட்டில் இருந்து வந்தவரை போல் பார்ப்பார்களாம்!

’’ஸ்லீவ்லெஸ் டிரெஸ் போட்டுக்கிட்டோ, ஷார்ட்ஸ் போட்டபடியோ போனா, டாட்டூவை பார்த்து, வெளிநாட்டுக்காரின்னு நினைச்சுக்குவாங்க. இங்க உள்ளவங்க யாரும் இவ்வளவு டாட்டூ குத்தமாட்டாங்கன்னு அவங்க நினைப்பு. அதோட, டாட்டூ குத்தும்போது எப்படி வலியை தாங்கிக் கிட்டேன்னும் நிறைய பேர் கதைப் கேட்பாங்க. எனக்குச் சிரிப்புதான் வரும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை. ஒவ்வொரு ரசனை. சில பேர், சின்ன வயசுலயே பெரிய அனுபவங்களை பெற்றிருப்பாங்க. எனக்கு டாட்டூ மேல இருக்கிற மாதிரி, அவங்களுக்கு வேறு எது மேலயும் இருக்கலாம். ஆனா, வயசு, பாலினம், தோற்றத்தை வச்சு எதையும் வரையறுக்கக் கூடாதுங்கறது என் எண்ணம்’’ என்கிறார், இந்த டாட்டூக் காதலி!

நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close