[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

”என்னுடைய பிறப்பு ஒரு மோசமான விபத்து”: தற்கொலை செய்துகொண்ட மாணவன் எழுதிய கடிதம்

dalit-scholar-rohit-vemula-s-suicide-note

சாதிப்பாகுபாட்டால் ஹைதரபாத் பல்கலை மாணவன் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில்,அவர் எழுதிய கடிதங்கள் தற்போது வெளியாக ஆரம்பித்துள்ளன.தடயவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் எழுதிய கடித விவரங்கள்..

அதில்,கார்ல் சாகனைப் போல அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பதுதான் எப்போதும் தனது விருப்பமாக இருந்ததாக ரோஹித் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த கடைசிக் கடிதம் மட்டுமே தமது எழுத்தாகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சிலருக்கு அவர்களுடைய பிறப்பே சாபம்தான் என்றும், தன்னுடைய பிறப்பும் ஒரு மோசமான விபத்து என்றும் கடிதத்தில் ரோஹித் கூறியுள்ளார். தம்மைச் சூழ்ந்துள்ள வெறுமை, தனக்கு மிகக் கொடுமையாக இருப்பதாகவும், அதனால்தான் இதைச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு மாதக் கல்வி உதவித்தொகையாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரவேண்டி இருப்பதாகவும், அந்த பணம் தனது குடும்பத்தினருக்குப் போய்ச் சேருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னுடைய இறுதிச் சடங்கு அமைதியாகவும், சுமுகமாகவும் இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ள ரோஹித், உயிருடன் இருப்பதைவிட மரணம் தமக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

பின்குறிப்பாக, தற்கொலைக் கடிதத்தின் சம்பிரதாயங்களை எழுத மறந்து விட்டதாக கூறியுள்ள அவர், தனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பில்லை என்றும் இதற்காக நண்பர்களையோ, எதிரிகளையோ தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close