[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

பர்தா அணிந்துகொண்டு பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்த ஆண்!

man-booked-for-wearing-burkha-entering-ladies-toilet-in-goa

கோவா பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் பர்தா அணிந்துகொண்டு நுழைந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

மலைகள், அரபிக்கடல், கோட்டைகள் என இந்தியாவின் சுற்றுலாப் பகுதிகளில் முக்கியமான இடமாக உள்ளது கோவா. இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை தருகின்றனர்.  ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் கோவாவின் பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் ஆண் ஒருவர் இஸ்லாமிய பெண் போல பர்தா அணிந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

35 வயது அரசு ஊழியரான விர்ஜில் பெர்னாண்டஸ், இஸ்லாமிய பெண்போல பர்தா அணிந்துகொண்டு முகத்தையும் மூடிக்கொண்டு கோவா சென்ட்ரல் பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார். தான் பர்தா அணிந்துள்ளதால் யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டு, அங்குள்ள பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்துள்ளார். விர்ஜிலின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அங்கிருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு காவலில் இருந்த போலீசார் உடனடியாக விர்ஜிலை கைது செய்தனர். அவர் மீது ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close