[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை திருவாரூரில் இருந்து தொடங்கினார் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமனம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான பரப்புரையை நாளை திருவாரூரில் தொடங்கும் நிலையில், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களவை தேர்தலில் 1 தொகுதி, இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டி - சே.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி)
  • BREAKING-NEWS பாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - கட்சித்தலைவர்கள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாளை மதியம் 2 மணிக்கு வெளியிடுகிறார் கமல்ஹாசன்

சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்

crpf-soldiers-heart-touching-selfie-before-pulwama-attack

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். அப்பொழுது, திடீரென ஆதில் என்ற பயங்கரவாதி மூலம் ராணுவ வீரர்கள் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு முன் நிதின் ராதோர் என்ற துணை ராணுவ வீரர் எடுத்த செல்ஃபியும் அவரது கடைசி தொலைபேசி அழைப்பும் மனதை நெகிழவைத்துள்ளது. இந்த செல்ஃபி படத்தை நிதின் தமது சிஆர்பிஎப் சீருடையில் அவர் செல்லவிருந்த வாகனத்திற்கு முன்பு நின்று எடுத்துள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்திலுள்ள சோர்பாங்கரா கிராமத்தை சேர்ந்தவர். 36 வயதான இவருக்கு சுஷ்மா என்ற மனைவியும், ஜே(Jay) என்ற 10 வயது மகனும் உள்ளனர். நிதின் ராதோர் 15 ஆண்டுகள் சிஆர்பிஎப் வீரராக பணிபுரிந்துள்ளார். 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஜம்மு காஷ்மீருக்கு நிதின் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவர் தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து   காய்ச்சலால் அவதிபட்டிருக்கும் அவரது மகன் ஜே-வை விசாரித்திருக்கிறார். அவரின் கடைசி செல்ஃபியும், கடைசி அழைப்பும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. 

இந்த தாக்குதலில் உயிரிழந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குல்விந்தர் சிங்கிற்கு கடந்த ஜனவரி மாதத்தில் தான் திருமணம் நிச்சியிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது இறப்பு செய்தி அவரது குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் மூழ்கடித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ரவுலி கிராமத்தைச் சேர்ந்தவர் குல்விந்தர் சிங். 28 வயதான இவருக்கும் லோதிப்பூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு நவம்பர் மாதம்  திருமணம் நடக்கயிருந்தது. 

குல்விந்தர் குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் போனது. கடந்த 2014 ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப்பில் சேர்ந்தார். இவர் விடுப்பு முடிந்து ஊர் திரும்பும் முன் அவர் தந்தையிடம் பேசிய கடைசி உரையாடலை கேட்டால் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் ததும்பும். அவர் தனது தந்தையிடம், ‘நான் அக்டோபர் மாதம் நான் திரும்பிவந்துவிடுவேன் ஏனென்றால், நீங்கள் தனியாக திருமண வேலைகள் அனைத்தையும் செய்ய முடியாது. அதனால் நான் சீக்கிரம் வந்து உங்களுக்கு துணையாக இருப்பேன்’ என கூறியிருந்தார்.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close