[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்

driver-of-blown-up-crpf-bus-from-moga-father-wants-befitting-reply-to-pak

இனி எந்த தந்தையும் தன்னுடைய மகன்களை இழக்கக்கூடாது என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய பஞ்சாப் வீரரின் தந்தை கூறியுள்ளார்.

பஞ்சாப் ‌மாநிலம் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த சிஆர்பிஎஃப் வீரர் ஜெய்மால் சிங்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. 25 வருடம் அனுபவம் வாய்ந்த ஜெய்மால் சிங் ஓட்டிச்‌ சென்ற பேருந்துதான் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அதில் உயிரிழந்த ஜெய்மால் சிங்கின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வீரமரணமடைந்த அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

ஜெய்மால் சிங்கிற்கு வெகுவிமரிசை‌யாக திருமணம் நடந்ததை கண்ணீருடன் நினைவு கூறும் அவரது தந்தை ஜஸ்வந்த் சிங், மகனின் உடலுக்கு அருகே அழுதவண்ணம் அமர்ந்து அஞ்சலி செலுத்தினார். ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,  “1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி ஜெய்மால் சிங் பிறந்தார். கிராமத்தில் படித்த அவர், 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி மத்திய ரிசர்வ் படையில் சேர்ந்தார்” எனத் தெரிவித்தார். 

மேலும் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் தீவிரவாதத்தால் இனியும் எந்த தந்தையும், மனைவியும் அவர்களின் மகன்களையும் கணவர்களையும் இழக்கக்கூடாது எனவும் பிரதமர் மோடிக்கு ஜஸ்வந்த் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீரமரணம் அடைந்த ஜெய்மால் சிங்கிற்கு சுக்ஜித் கவுர் என்ற மனைவியும் குர்பர்காஷ் என்ற 5 வயது மகனும் உள்ளனர். ஜெய்மால் சிங் இறக்கும் முன்பு தாக்குதல் நடத்தப்பட்ட அன்று காலை 8 மணியளவில் அவரது மனைவி சுக்ஜித் கவுரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். 

இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில்,  “வேறொரு ஓட்டுநர் விடுப்பில் இருப்பதால் நான் அவருக்காக இன்று வாகனம் ஓட்டுகிறேன் என கணவர் கூறினார். என்னிடம் தொலைபேசியில் பேசும்போது ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறினார். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. ஆனால் நான் திரும்ப வருவேன் என என்னிடம் கூறினார். ஆனால் அவர் வரவில்லை. எங்கள் திருமணத்திற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து மகன் குர்பர்காஷ் பிறந்தான். இந்த உலகத்திலேயே அவர் மிகவும் அன்பு வைத்திருப்பது மகன் குர்பர்காஷ் மீது தான்” எனத் தெரிவித்தார்.

ஜெய்மால் சிங் இறந்த தகவலைக் கேட்ட அவரது மனைவி சுயநினைவை இழந்த நிலையில், இன்று அவரின் உடலைக் கண்டு கதறி‌ அழுதார். ஜெய்மால் சிங் உடல் வைக்கப்படிருந்த இடத்தில் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி‌ தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.‌ பஞ்சாப்பின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பிர் சிங் படல், ஜெய்மால் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close