[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

திருமண விருந்தை ரத்து செய்து ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

surat-businessman-donates-rs-11-lakh-to-pulwama-martyrs-families

மகளின் திருமண விருந்தை ரத்து செய்துவிட்டு அதற்கான தொகையை காஷ்மீர் சம்பவத்துக்கு நிதியாக வழங்கிய வைர வியாபாரிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர், முதலமைச்சர்கள், எதிர்கட்சித்தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கக்கோரி சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது. அந்தந்த மாநில முதலமைச்சர்களும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்து வருகின்றனர். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூ.16 லட்சத்தை காஷ்மீர் சம்பவத்துக்கு நிதியாக அளித்துள்ளார். அதில் ரூ11 லட்சத்தை வீரர்களின் குடும்பத்துக்கும், ரூ.5 லட்சத்தை தன்னார்வ சேவை அமைப்புகளுக்கும் வழங்கியுள்ளார்.  

குஜராத் சூரத்தைச் சேர்ந்த வைரவியாபாரி டேவஷி மானெக் தனது மகளின் திருமணத்தை நேற்று நடத்தியுள்ளார். திருமணத்துக்கு பிறகான விருந்து நிகழ்ச்சியையும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக தான் ஏற்பாடு செய்திருந்த மகளின் பிரம்மாண்ட திருமண விருந்தை ரத்து செய்து அதன் தொகையான ரூ.5 லட்சத்தை தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்கியுள்ளார். மேலும் ரூ.11 லட்சத்தை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நிதியாக வழங்கியுள்ளார் வைர வியபாரியின் இந்த உதவியை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close