[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

கடந்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 339 பாதுகாப்பு படை வீரர்கள் பலி !

last-4-years-339-security-personnel-have-died-says-home-ministry-data

கடந்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தீவரவாத சம்பங்கள் அதிகரத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விடுப்பில் சொந்த ஊர் சென்று, பின் மீண்டும் பணியில் சேர வந்த வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 350 கிலோ வெடிபொருட்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். 

இந்நிலையில்  பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ளது. அதில் கடந்த நான்கு ஆண்டுகளில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது 2014 ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மொத்தமாக 1708 தீவரவாத தாக்குதல்கள் நடைபெற்றதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. 

  ஆண்டு       மொத்த தாக்குதல்கள்
   2014           222 தாக்குதல்கள்
   2015           208 தாக்குதல்கள் 
   2016           322 தாக்குதல்கள்
   2017           342 தாக்குதல்கள்
   2018           614 தாக்குதல்கள்

மேலும் இந்தத் தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைகளும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2014-2018 வரை மொத்தம் 1315 பேர் தீவரவாத செயல்களால் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றது. அதில் 138 பொதுமக்களும், 339 பாதுகாப்பு படை வீரர்களும், 838 தீவரவாதிகளும் உயிரிழந்தாக அந்தத் தரவுகள் கூறுகின்றன.

   ஆண்டு                   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
                   பொதுமக்கள்     பாதுகாப்பு படை வீரர்கள்     தீவரவாதிகள்       

   2014               28                                47                                            110
   2015               17                                39                                            108
   2016               15                                82                                            150
   2017                40                               80                                            213
   2018               38                                91                                            257

 

அதேபோல கடந்த 2016 முதல் 2018 வரை மொத்தம் 398 தீவரவாதிகள் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 2018 ஜூன் மாதம் மட்டும் 38 தீவரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்ததாக  இந்த தரவுகள் கூறுகின்றன.

     ஆண்டு       ஊடுருவிய தீவரவாதகள் எண்ணிக்கை

       2016            119 தீவரவாதிகள் 
       2017            136 தீவரவாதிகள்
       2018            143 தீவரவாதிகள்     

அத்துடன் கடந்த 2016 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவவில்லை என்றும் கூறுகின்றன. அதாவது 2016 ஆண்டில் உரி தாக்குதல் நடைபெற்ற பிறகு அந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தீவிரவாதிகள் ஊடுருவவில்லை. அதற்கு பிறகு 2018 ஆண்டின் டிசம்பர் மாதத்திலும் தீவரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close