[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

சிறுமியை காட்டில் வைத்து கேரள இமாம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்

sexual-harassment-complaint-on-kerala-imam

கேரள இமாம் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் ஷஃபிக் அல் குவாஸிமி. இவர் தோலிகோடு முஸ்லிம் மசூதியில் இமாமாக உள்ளார். அத்துடன் கேரள இமாம் கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் 15 வயது சிறுமி ஒருவரை குவாஸிமி காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியை குவாஸிமி காட்டுக்குள் அழைத்துச் சென்றபோது அதனை பார்த்த ஊர்மக்கள் சிலர் இதனை மீடியாக்களிடம் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து தோலிகோடு முஸ்லிம் மசூதி சார்பில் குவாஸிமியிடம் தனி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூஸ் மினிட் இணையதளத்திற்கு தோலிகோடு முஸ்லிம் மசூதியின் தலைவர் பாதுஷா பேசிய 15 நிமிட ஆடியோ க்ளிப் கிடைத்துள்ளது. அதில், “சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்திற்கு நாங்கள் சென்றோம்.  சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அவர் பகுதியில் இன்னோவா கார் ஒன்று சென்றதை அவர்கள் உறுதி செய்தனர். அவர்கள் கூறிய வண்டி நம்பரை வைத்து அது குவாஸிமியின் கார் எண் தானா என்பதை உறுதி செய்ய முடியும். அதுமட்டுமின்றி அங்கிருந்த ஒரு பெண், வண்டிக்குள் ஒரு பெண் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக அது குறித்து இமாமிடம் கேட்டதற்கு அது தனது மனைவி என்று அவர் சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்து பள்ளிச் சீருடை மற்றும் பேட்ஜ் காரினுள் இருந்துள்ளதை அங்கிருந்த பெண்கள் கண்டுள்ளனர். பள்ளி மாணவி எப்படி மனைவியாக முடியும் எனப் பெண்கள் கேட்டதற்கு குவாஸிமி காருடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பெண்கள் பக்கத்திலுள்ள ஆண்களுடன் அவரின் காரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் வேகமாக சென்றிருக்கிறார்.” என பாதுஷா கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட ஒரு வாரங்கள் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் எந்தவொரு வழக்கும் இமாம் மீது பதிவு செய்யப்படவில்லை. அதேபோல பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி சார்ப்பிலும் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை. இதனிடைய அகில இந்திய இமாம் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எதற்காக இந்த நடவடிக்கை என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close